| மீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்? : ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரம் |
| [ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2009, 03:21.33 PM GMT +05:30 ] |
சிங்கள
தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத்
தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரத்தை இந்தியா கைக்கொள்ள
முயற்சிக்கின்றது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் இன்றைய
பதிப்பின் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. |
| ஈழநாடு பத்திரிகையின் இன்றைய இதழின் வெளிவந்துள்ள
கட்டுரையின் முழுவடிவம்: ஈழத் தமிழர்களின் இத்தனை கால அவலங்களுக்கும் மூல காரணமாக விழங்கும் இந்திய ஆதிக்க சக்தி, தற்போது ஈழத் தமிழர்களை மையப்படுத்திப் புதியதோர் துரோகத்தை அரங்கேற்ற முற்படுகின்றது. கடந்த வாரத்தில் இந்திய உளவு நிறுவனமான றோவினால் தமிழக ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்ட செய்தி ஒன்று இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. கடந்த வார இறுதியில் 'இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்' என்ற தலைப்பில்
ஜுனியர் விகடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. 'விழ விழ எழுவோம்; ஒன்று விழ,
ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில்
மீண்டும் போர் மூளும், அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு
கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில் என்று அந்த இந்தியப்
பலிபீடத்திற்கு விடுதலைப் புலிகளை வலிந்து பதிவு செய்துள்ளார்கள். அதற்காக இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் பலி கொள்ளப்பட்டார்கள்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும், ஈழத் தமிழர்களின் பலம் அழிக்கப்பட்டதற்கும்
இந்தியாவே பிரதான பாத்திரம் வகித்தது என்பதை அந்தப் பேரவலத்தை எதிர்கொண்ட ஈழத்
தமிழாகள் என்றும் இந்தியாவை மன்னிக்கமாட்டார்கள். இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும். போரில்
சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை
இந்தியாவிடம் வழங்க வேண்டும். இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை
இந்தியாவிடம் வழங்க வேண்டும். இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட
சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நான்கு
சுயநல நோக்கங்களை இலங்கை அரசு உதாசீனம் செய்ததன் காரணமாகவே இந்தியா மீண்டும்
ஈழத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அச்சுறுத்தல் மூலம் சிங்கள தேசத்தை
அடிபணிய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. போர் முடியும்வரை இந்தியாவின் அத்தனை கோரிக்கைகளுக்கும் தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்கும், விருப்பங்களுக்கும் அதிக மதிப்புக் கொடுத்து வருகின்றது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் முதல் முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷ, மற்ற மூன்று கோரிக்கைகளையும்கூட மறுத்து விட்டார். இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது.
அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப்படுத்தத் தொடங்கியிருப்பதை ஜீரணிக்க
முடியாமல் தவிக்கின்றது இந்தியா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு
இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும்
சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி
செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு
அமைப்பான 'றோ' மத்திய அரசை எச்சரித்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் துணை போனதன் மூலம் ஈழத் தமிழர்களின் பலமாக விழங்கிய விடுதலைப் புலிகள் சிங்கள தேசத்தால் தோற்கடிக்கப்பட்டார்கள். இந்தியச் சதியினால் விடுதலைக் கனவுகளோடு உயிர் கொடுத்த தமிழினம் முள்ளிவாய்க்காலில் உயிர் பறிக்கப்பட்டு விட்டார்கள். தமிழீழ ஆன்மா இந்தியச் சதியால் மீண்டும் சிங்கள தேசத்திடம்
அடிமைப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது இந்திய நட்புக் கரம்
தறிக்கப்பட்டுவிட்டதனால், தெற்கிலும் சீனா பலமாகக் கால் பதிக்கின்றது.
கச்சத்தீவில் தனது இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது. இந்த இருவரில் யாரையும் ஆதரிக்கும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை. வருகின்ற பேயிலும் பார்க்கப் பழகிய பேயை வைத்துக் காய் நகர்த்தும் நிலையை எடுத்துள்ள இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்குப் பயன்படுத்த முனைகின்றது. தமிழீழ மக்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத முயற்சியாகவே இதனை நோக்கலாம்.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள் தமிழ்
மக்களால் நிராகரிக்கப்பட்டு 78 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க மறுத்ததைக்
கவனத்தில் கொண்டால், இந்தியக் கனவுகள் ஈடேறும் சாத்தியம் கிடையாது. இந்தியா விடும் றீலை நம்பி ஈழத் தமிழர்கள் மீண்டும் பலிபீடத்தை நோக்கிச் செல்லாமல், மனிதாபிமானம் கொஞ்சமாவது மீந்திருக்கும் மேற்குலகின் கரங்களைப் பற்றி நடப்பதே ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்பதே யதார்த்தம். |